நமது மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு சிறந்த முறையில் பணியாற்ற முயற்சி செய்துவருகிறோம் என்பதை அறிவீர்கள்.அவ்வகையில்
நமது சிவாமேட்ரிமோனி உறுப்பினர்களுக்கு வரன் அறிமுக வீடியோ சேவையை அறிமுகம் செய்கின்றோம்.
இச்சேவையின்படி வரன் பற்றிய தகவல்களை உங்கள் வீட்டில் இருந்தபடியோ அல்லது உங்களுக்கு தெரிந்த ஸ்டூடியோவிற்கு சென்று பதிவு செய்து இவ்வீடியோவை சிவாமேட்ரிமோனிக்கு அனுப்பினால் அவற்றை வரனின் ப்ரோபல் பக்கத்திலும் சிவாமேட்ரிமோனியின் யூடிப் சேனல் வழியாகவும் ப்ரமோட் செய்து உங்களுக்குத் தேவையான வரன்களை கண்டறிய நாங்கள் உதவுவோம்.
இந்த வரன் அறிமுக வீடியோவை சம்பந்தப்பட்ட வரனே பேசுவது போலவோ அல்லது வரனின் பெற்றோர்/உறவினர் வரனின் தகவல்களை அறிமுகம் செய்வதாகவோ வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்பலாம்.
உங்கள் போனில் அல்லது கேமராவில் ரெக்கார்ட் செய்து அந்த வீடியோவை சிவாமேட்ரிமோனியின் வாட்ஸ் அப் நம்பரான 9677310850 என்ற எண்ணிற்கு அனுப்பி வைத்தால் அதை உங்கள் ப்ரோபல் பக்கத்தில் இணைப்பதோடு சிவாமேட்ரிமோனியின் யூடிப் சேனல் மூலமாக ப்ரமோட் செய்வோம்.இச்சேவை முற்றிலும் இலவசமாகும்.
கீழ்கண்ட தகவல்கள் குறிப்பிட்ட வரன் அறிமுக வீடியோவில் இருந்தால் முழுமையான வரன் அறிமுகத்திற்கு உதவும்.
வரனின் பெயர்
வரனின் பிறந்த தேதி மற்றும் வயது:
ராசி நட்சத்திரம்
சாதி
படிப்பு
வேலையின் பெயர்
வேலை பார்க்கும் ஊர்
வேலை பார்க்கும் நிறுவனம்
மாதச்சம்பளம்
உங்கள் உயரம்
அப்பா அம்மா பெயர் மற்றும் விவரம்
உடன்பிறந்தவர்கள் (எத்தனை சகோதரர்கள் ,எத்தனை பேர் சகோதரிகள்? திருமணமானவர்கள் எத்தனை பேர்?)
சொந்தவீடு மற்றும் சொத்துக்கள் விவரம்( இத்தகவலை விருப்பம் இருந்தால் தெரிக்கவும்)
நீங்கள் தற்போது வசிக்கும் ஊர்:
வரன் எதிர்பார்ப்பு ( என்ன சாதியில் வரன் தேடுகிறீர்கள்? வேலை செய்யும் வரன் வேண்டுமா? வேண்டும் என்றால் என்ன மாதிரி வேலைகளில் எதிர்பார்க்கிறீர்கள்?)
வேலை செய்யும் வரன் வேண்டுமா? வேலை செய்யாத வரன் விருப்பமா?
குறிப்பு:
வரனுக்கு திருமணம் நிறைவேறி விட்டால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவும்.உடன் குறிப்பிட்ட வீடியோவை நாங்கள் டெலிட் செய்துவிடுவோம்.
profile introduction video are welcomed